இஸ்ரேல் அந்த முடிவுக்கு வந்தால்… பணயக்கைதிகள் தொடர்பில் மிரட்டல் விடுத்த ஹமாஸ்
பணயக்கைதிகளை மீட்கலாம் என இஸ்ரேல் மீண்டும் இராணுவ நடவடிக்கையைத் தொடங்கினால், விளைவுகள் கடுமையாக இருக்கும் என ஹமாஸ் மிரட்டல் விடுத்துள்ளது.
படுகொலை செய்வோம்
கடந்த ஜூன் மாதம் காஸாவின் நுசிராத் முகாமில் நடத்தப்பட்டதைப் போன்ற பணயக்கைதிகளை மீட்கும் நடவடிக்கையை இஸ்ரேல் மேற்கொள்ள உத்தேசித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
அத்தகைய நடவடிக்கை ஏதேனும் நடந்தால், சிறைப்பிடிக்கப்பட்டவர்களை படுகொலை செய்வோம் என்று ஹமாஸ் படைகள் மிரட்டல் விடுத்துள்ளனர். நவம்பர் 22ம் திகதி வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவதன் பின்விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டாம் என்று ஹமாஸ் அதன் செயற்பாட்டாளர்களிடம் கூறியது. அத்துடன் பணயக்கைதிகளின் தலைவிதிக்கு இஸ்ரேல் மட்டுமே பொறுப்பு என்றும் கூறியுள்ளது.
ஆனால் பணயக்கைதிகளை மீட்க இஸ்ரேல் எப்போது நடவடிக்கை எடுக்க உள்ளது என்பது தொடர்பான தகவல் ஏதும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. ஆனால் இஸ்ரேலில் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூறுகையில்,
ஹமாஸ் மீதான அழுத்தம் அதிகரித்து வருவதாகவும், இந்த முறை உண்மையில் பணயக்கைதிகள் தொடர்பான ஒப்பந்தத்தை நாங்கள் முன்னெடுக்க முடியும் என்றும் கூறினார்.
இஸ்ரேல் எல்லையில்
கடந்த ஜூன் 9ம் திகதி நுசிராத் முகாமில் நடத்தப்பட்ட இஸ்ரேலின் தாக்குதலில் பாலஸ்தீன மக்கள் 200 பேர்கள் கொத்தாக கொல்லப்பட்டனர். ஹமாஸ் படைகளுக்கு எதிரான இஸ்ரேலின் போரில் மிக மோசமான நாள் அதுவென்றும் கூறப்படுகிறது.
ஆனால் பணயக்கைதிகளில் நால்வரை மட்டுமே இஸ்ரேல் ராணுவத்தால் மீட்க முடிந்தது. நுசிராத் முகாம் மீதான இஸ்ரேலின் தாக்குதலை அடுத்து பணயக்கைதிகளுக்கு அளிக்கப்பட்ட சலுகைகள் குறைக்கப்பட்டதாக ஹமாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் அவ்வாறான தாக்குதல் எதிரிகளால் முன்னெடுக்கப்பட்டால், எஞ்சிய பணயக்கைதிகள் அனைவரையும் படுகொலை செய்யவும் படைகளுக்கு ஹமாஸ் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் திகதி இஸ்ரேல் எல்லையில் ஹமாஸ் படைகள் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பதிலடியாக, பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் இராணுவம் முன்ண்டுத்துவரும் தாக்குதலில் இதுவரை கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 44,500 கடந்துள்ளது.
இஸ்ரேலின் இந்த தாக்குதல் காஸாவின் பெரும்பகுதியை மொத்தமாக சேதப்படுத்தியுள்ளது.