மணல் திட்டில் மோதிய புலம்பெயர்ந்தோர் படகு: 85 பேரை மீட்ட பிரான்ஸ் கடற்படை
பிரான்சிலிருந்து பிரித்தானியா செல்லும் முயற்சியில் ஆங்கிலக்கால்வாயைக் கடக்க முயன்ற புலம்பெயர்ந்தோர் பயணிக்கும் படகொன்று சிக்கலுக்குள்ளாகியது.
மணல் திட்டில் மோதிய புலம்பெயர்ந்தோர் படகு
நேற்று புதன்கிழமை, பிரான்சிலிருந்து பிரித்தானியா செல்லும் முயற்சியில் புலம்பெயர்ந்தோர் பயணிக்கும் படகொன்று புறப்பட்டுள்ளது.
அந்த படகில் 85 புலம்பெயர்ந்தோர் பயணித்துள்ளனர்.
ஆங்கிலக்கால்வாயில், Pas-de-Calais என்னும் பகுதிக்கருகே பயணிக்கும்போது அந்த படகு மணல் திட்டொன்றில் மோதியுள்ளது.
படகிலிருந்தோர் உதவி கோரி அழைக்க, பிரான்சுக்கு சொந்தமான கடற்படை படகொன்று அவர்களை மீட்டுள்ளது.
அத்துடன், மற்றொரு இடத்தில் படகொன்றிலிருந்து ஐந்து பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் 85 பேரையும் Boulogne-sur-Mer என்னுமிடத்துக்கு அழைத்துவந்த பிரான்ஸ் கடற்படையினர், அவர்களை பொலிசார் மற்றும் அவசர மருத்துவ உதவிக்குழுவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்த ஆண்டில் மட்டும் பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியில் 70க்கும் அதிகமான புலம்பெயர்ந்தோர் ஆங்கிலக்கால்வாயில் மூழ்கி உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.