;
Athirady Tamil News

பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் மக்களைக் கடத்தும் கடத்தல்காரர்கள்: ஜேர்மனியில் பொலிசார் ரெய்டு

0

பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் மக்களைக் கடத்தும் கடத்தல்காரர்கள் ஜேர்மனியில் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், ஜேர்மனியில் பொலிசார் ரெய்டு நடவடிக்கைகளில் இறங்கினார்கள்.

பிரித்தானியாவுக்குள் மக்களைக் கடத்தும் கடத்தல்காரர்கள்
மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஆப்பிரிக்க பகுதிகளிலிருந்து சட்டவிரோத புலம்பெயர்வோரை பிரான்சுக்கு கொண்டுவந்து, பிரான்சிலிருந்து தரமற்ற ரப்பர் படகுகள் மூலம் ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் அனுப்பும் ஆட்கடத்தல்காரர்கள் ஜேர்மனியை மையமாகக் கொண்டு இயங்குவதாக ஜேர்மன் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

இந்தக் கடத்தல்காரர்களைக் கைது செய்யும் நோக்கில், 500க்கும் மேற்பட்ட ஜேர்மன் பொலிஸ் அதிகாரிகள், இன்டர்போல் மற்றும் பிரான்ஸ் அதிகாரிகளுடன் இணைந்து நேற்று ஜேர்மனியின் North Rhine-Westphalia மற்றும் Baden-Württemberg ஆகிய மாகாணங்களில் அதிரடியாக ரெய்டுகளில் ஈடுபட்டுள்ளார்கள்.

இந்த ரெய்டுகள் குறித்து சமூக ஊடகம் ஒன்றில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள பிரான்ஸ் உள்துறை அமைச்சரான நான்சி ஃப்ரேஸர், இந்த நடவடிக்கை, பயங்கரமான சர்வதேச ஆட்கடத்தல்காரர்களுக்கு பெரிய அடி என்று குறிப்பிட்டுள்ளார்.

வன்முறையைப் பயன்படுத்தி, அச்சுறுத்தி, இந்த கடத்தல்கார கும்பல்கள் மக்களை சிறுபடகுகளில் ஏற்றி ஆங்கிலக்கால்வாய் வழியாக அனுப்புவதன் மூலம் மனித உயிர்களுக்கு ஆபத்தை உருவாக்குகிறார்கள்.

மக்களுக்கு துன்பத்தை ஏற்படுத்தும் இந்த மோசமான கடத்தல்களுக்கு எதிராக தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார் அவர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.