சிறுத்தை தனது இருப்பை அடையாளப்படுத்த என்ன பண்ணும்னு தெரியுமா? வைரலாகும் காணொளி
சிறுத்தையொன்று தனது இருப்பை அடையாளப்படுத்துவதற்காக குறிப்பிட்ட இடத்தை தெரிவு செய்து தனது சிறிநீரை பாய்ச்சும் காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சிறுத்தையும் பூனை குடும்பத்தை சேர்ந்த மற்ற புலி சிங்கம் போலவே, இரசாயனத் தொடர்பைப் பயன்படுத்தி அவற்றின் இருப்பைக் தெரிவிக்கும் வழக்கத்தை கொண்டிருக்கின்றது.
சிறுத்தைகள் தங்கள் அடையாளம் மற்றும் இனப்பெருக்க நிலை பற்றிய தகவல்களை தெரிவிக்கும் வாசனையை விட்டு செல்வதற்காக குறிப்பிட்ட சில இடங்களில் சிறுநீர் கழிக்கும் வழக்கத்தை பின்பற்றுகின்றன.
இந்த வாசனை எதிரிகள் அந்தப் பகுதிக்குள் நுழைவதைத் தடுக்கவும் மற்றும் நேரடியான தொடர்பு இல்லாமல் மோதல்களைத் தவிர்க்கவும் சிறுத்தைகளுக்கு பெரிதும் உதவுகின்றது.
மேலும் சிறுத்தைகள் தங்கள் துணையை கண்டுபிடிக்கவும் இந்த முறையை தான் பயன்படுத்துகின்றன.அந்த நோக்கத்துக்காகவே குறிப்பிட்ட சில இடங்களை தெரிவு செய்து சிறுநீர் கழிக்கின்றது.
அந்த வகையில் சிறுத்தையொன்று தனது இருப்பை அடையாளப்படுத்துவதற்காக சிறுநீர் கழிக்கும் காணொளியொன்று இணையத்தில் பெரிதும் கவனம் பெற்று வருகின்றது.