வேலை தருவதாக சமூக வலைத்தளங்களில் பண மோசடி : விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை
வேலை வழங்குவதாக கூறி சமூக வலைத்தளங்களில் பண மோசடி இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை இலங்கை கணினி அவசர பதில் மன்றத்தின் தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்துள்ளார்.
வேலை அல்லது வேறு நடவடிக்கைகள் தொடர்பில் மக்களின் இரகசிய தகவல் பெறப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்படாத அணுகல்
இந்தநிலையில், இதுபோன்ற செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாட்ஸ்அப் கணக்குகளை அங்கீகரிக்கப்படாத அணுகல் தொடர்பாக கடந்த வாரம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஹேக்கர்கள் வாட்ஸ்அப் கணக்குகளில் நுழைந்து பெரும்பாலும் நிதி மோசடியில் ஈடுபடுவது தெரியவந்துள்ளதாகவும் இதுபோன்ற சுமார் 74 முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.