;
Athirady Tamil News

தேங்காய் விலை அதிகரிப்பால் ஆலயங்களில் தேங்காய்க்குப் பதிலாக இளநீர்

0

இலங்கையில் தேங்காய் விலை அதிகரிப்பால் பக்தர்கள் கதிர்காமம் விகாரைக்கு முன்பாக சிதறு தேங்காய் உடைப்பது 90 வீதத்தால் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கதிர்காமத்திற்கு வழிபடச் செல்லும் பல பக்தர்கள், பூஜை பொருட்களுடன் சிதறு தேங்காய் உடைக்க மறக்க மாட்டார்கள். அதோடு கதிர்காமத்திற்குச் சென்று சிதறு தேங்காய் உடைக்காதவர்கள் இல்லை என்றே கூறலாம்.

தேங்காய்க்குப் பதிலாக இளநீர்
இந்நிலையில் நாட்டில் தற்போது தேங்காய்களின் விலை உயர்வைக் கருத்திற் கொண்டு பக்தர்கள் சிதறு தேங்காய் உடைப்பதைத் தவிர்த்து வருவதாக கூறப்படுகின்றது .

தற்போது கதிர்காமம் பிரதேசத்தில் தேங்காய் ஒன்று 160 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. தேங்காய் தட்டுப்பாடு காரணமாக தேங்காய் எண்ணெயின் விலையும் அதிகரித்துள்ளதாகவும், சமய ஸ்தலங்களில் விளக்கு ஏற்றுவதும் குறைந்துள்ளது

அதேவேளை பக்தர்கள் தேங்காய்க்குப் பதிலாக செவ்விளநீரை வைப்பதாக செல்ல கதிர்காம நதியில் உள்ள விநாயகர் ஆலயத்தின் பூஜகர் ஜனக திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.