மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் PUCSL தீர்மானம்
மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் மின்சார சபை சமர்ப்பித்துள்ள பிரேரணையை ஆய்வு செய்யவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.
முன்மொழிவை ஆணைக்குழு பரிசீலித்து அதற்கான பரிந்துரைகளை வழங்கும் என்று சிரேஷ்ட அதிகாரி குறிப்பிட்டார்.
ஒரு மாத கால அவகாசம் தேவைப்படும்
அதன்படி மின்சார சபையின் முன்மொழிவு தொடர்பான இறுதித் தீர்மானத்தை எட்டுவதற்கு சுமார் ஒரு மாத கால அவகாசம் தேவைப்படும் என்றும், பயன்பாட்டு ஆணைக்குழுவின் சட்டத்தின்படி அது தொடர்பான செயல்முறை நடைமுறைப்படுத்தப்படும் என்றும் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, எதிர்வரும் 6 மாதங்களுக்கு மின்சாரக் கட்டணத்தை திருத்தம் செய்யாமல் பேண வேண்டும் என இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளமைக்கு பல தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.