அகதிகளுக்கு ஆதரவாக பிரித்தானியா எடுத்துள்ள முடிவு: நல்ல வரவேற்பு
அகதிகளுக்கு ஆதரவாக பிரித்தானியா எடுக்கும் முயற்சி ஒன்றிற்கு தொண்டு நிறுவனங்கள் மற்றும் சில அரசியல்வாதிகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
அகதிகளுக்கு ஆதரவாக பிரித்தானியா முன்வைத்துள்ள திட்டம்
ஹொட்டல்கள் மற்றும் பிற முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்தோர், தங்களுக்கென தங்க ஒரு வீடு மற்றும் வேலையை கண்டுபிடிப்பதற்காக 28 நாட்கள் நேரம் கொடுக்கப்படுகிறது.
இந்த காலகட்டத்தை அதிகரிக்கவேண்டும் என அரசுக்கு பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவருகின்றன.
இந்நிலையில், அந்த காலகட்டத்தை 56 நாட்களாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது பிரித்தானிய உள்துறை அலுவலகம்.
சோதனை முயற்சியாக, திங்கட்கிழமை முதல் அமுல்படுத்தப்படும் இந்த திட்டம், 2025ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை அமுலில் இருக்கும்.
மேலும், அந்த காலகட்டத்தில், இந்த திட்டம் குறித்த ஆய்வும் மேற்கொள்ளப்பட்டு, அதன் மூலம் இதுபோன்ற விடயங்களில் எதிர்காலத்தில் முடிவு எடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.