;
Athirady Tamil News

கனடாவில் இந்திய இளைஞர் சுட்டுக்கொலை., வெளியான அதிர்ச்சியூட்டும் சிசிடிவி ஆதாரம்

0

கனடாவில் இந்திய இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவின் எட்மன்டன் நகரில், டிசம்பர் 6 அன்று, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 20 வயதான இந்திய இளைஞர் கொடூரமாக சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

துப்பாக்கிச் சூடு நடந்த 107வது அவென்யூக்கு அருகே, உள்ளூர் நேரப்படி இரவு 12:30 மணிக்கு காவல்துறைக்கு தகவல் வந்தது.

சம்பவ இடத்திற்கு பொலிஸார் சென்றபோது, ஒரு கட்டடத்தின் படிக்கட்டில் இந்திய இளைஞர் ஒருவர் மயங்கி கிடந்தார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்த இளைஞரின் பெயர் ஹர்ஷன்தீப் சிங் (Harshandeep Singh) என தெரியவந்தது. அவர் அக்கட்டடத்தில் பாதுகாவலராக பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது.

இக்கொலை தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிசிடிவி ஆதாரம் மற்றும் கைது

சிசிடிவி காட்சிகள், சம்பவ இடத்தில் சிங்கை அடித்து படிக்கட்டில் தள்ளியதையும், பின்னர் அவரை ஒருவர் பின்புறத்தில் இருந்து சுட்டதையும் காட்டுகிறது.

கொலைக்கான காரணம் இன்னும் தெரியாத நிலையில், எட்மன்டன் காவல்துறையினர் இரண்டு சந்தேக நபர்களான 30 வயதான எவன் ரெயின் (Evan Rain) மற்றும் ஜூடித் சால்டோவை (Judith Saulteaux) கைது செய்து, கொலை குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஹர்ஷன்தீப் சிங் சுட்டுக்கொல்லப்பட்ட CCTV காட்சிகள்-இங்கே கிளிக் செய்யவும்
இந்த கொலையின் பின்னணியில் என்ன காரணம் இருக்கலாம் என்பது காவல்துறையால் இதுவரை வெளியிடப்படவில்லை. இதன் மேலதிக தகவல்களுக்கு மன்றவிசாரணை மற்றும் சடல பரிசோதனை முடிவுகள் வெள்ளிக்கிழமை வரையிலான காலத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கொடூரச் சம்பவம் கனடாவில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக உள்ளூர் மாணவர்களுடன் இணைந்து வாழும் வெளிநாட்டு மாணவர்களின் பாதுகாப்பை மீண்டும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.