நீரியல் மற்றும் கடல் வள அமைச்சுக்கு புதிய செயலாளர்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் புதிய செயலாளராக சட்டத்தரணி எம். ஏ. எல். எஸ். மந்திரிநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க வழங்கினார்.
குறித்த கடிதம், சட்டத்தரணி எம். ஏ. எல். எஸ். மந்திரிநாயக்கவிற்கு இன்று (09) காலை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதியின் செயலாளர் கையளித்தார்.