யாழில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
யாழ்ப்பாணம் (Jaffna) வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் – வேரம் பகுதியில் 3 கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்றையதினம் (08) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
22 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
குறித்த இளைஞரிடம் வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்ட சோதனையின்போது அவரிடம் கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.