;
Athirady Tamil News

ஜேர்மனியில் 3,300 பேரின் கொலைக்கு உதவியதாக விசாரணைக்கு உட்படுத்தப்படும் 100 வயது நபர்

0

ஜேர்மனியில் 3,300க்கும் அதிகமானோரின் கொலைக்கு உதவியதாக 100 வயது நபர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

100 வயது நபர் மீது குற்றச்சாட்டு

பெயர் வெளியிடப்படாத அந்த நபர், நாசிக்கள் அமைத்த Sachsenhausen சித்திரவதை முகாமில் காவலாளியாக இருந்தவர் ஆவார்.

இரண்டாம் உலகப்போரின்போது, அந்த முகாமில் இருந்தவர்களை வேண்டுமென்றே கொல்வதற்கு உதவியாக இருந்ததாக அந்த நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சுமார் 200,000 பேர் அந்த முகாமில் அடைக்கப்பட்டிருந்ததாக கருதப்படுகிறது.

இப்படிப்பட்ட கொடூர செயலுக்கு உதவியாக இருந்த அந்த நபருக்கு இப்போது 100 வயதாகிறது.

என்றாலும், அவர் விசாரணைக்குட்படுத்தப்படுவதற்கு தகுதியாகவே இருப்பதாக கருதப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட உள்ளார்.

முன்பெல்லாம், இதுபோல் அடிமட்ட காவலாளியாக இருந்தவர்கள் மீது இதுபோல் குற்றம் சாட்டப்படுவதில்லை.

இப்போது அந்த நிலை மாறியுள்ளதால், எவ்வளவு காலமானாலும் சரி, சம்பந்தப்பட்டவர்களுக்கு எவ்வளவு வயதானாலும் சரி, நீதி நிலைநாட்டப்படுவது தவறாது என்று கூறியுள்ளார், International Auschwitz Committee என்ற அமைப்பின் துணைத்தலைவரான Christoph Heubner.

You might also like

Leave A Reply

Your email address will not be published.