;
Athirady Tamil News

நடுவானில் நிகழ்ந்த அனர்த்தம் : பரிதாபமாக பறிபோன உயிர்கள்

0

நடுவானில் இரண்டு இராணுவ உலங்கு வானூர்திகள் மோதியதில் ஒரு உலங்கு வானூர்தி தப்பிய நிலையில் மற்றொரு உலங்கு வானூர்தி விழுந்து விபத்துக்குள்ளானது.துருக்கியில்(turkey) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் 5 வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வழக்கான பயிற்சியில் ஈடுபட்டபோது சம்பவம்
துருக்கியின் தென்மேற்கு மாகாணமான இஸ்பர்ட்டாவில் வழக்கான பயிற்சியில் ஈடுபட்டபோது எதிர்பாராத வகையில் இரண்டு உலங்கு வானூர்திகள் ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டன.

இதில் ஒரு உலங்கு வானூர்தி பாதுகாப்பாக தரையிறங்கியதுடன் மற்றைய உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானது.

காரணம் உடனடியாக தெரியவில்லை

இரண்டு உலங்கு வானூர்திகள் மோதிக் கொண்டதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.

விபத்துக்குள்ளான உலங்கு வானூர்தி வயல்வெளியில் விழுந்து இரண்டாக உடைந்துள்ளதாக தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.