10 -வது இருக்கையில் இருந்து.., சட்டமன்றத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி இருக்கை இடமாற்றம்
தமிழக சட்டமன்றம் இன்று கூடிய நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இருக்கை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
உதயநிதி இருக்கை இடமாற்றம்
தமிழக சட்டப்பேரவை நேற்று (டிசம்பர் 9) கூடியது. அப்போது முதலில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், பிரமுகர்களின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், சட்டமன்றத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இருக்கை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதாவது இதற்கு முன்னதாக உதயநிதி ஸ்டாலின் 10 -வது இருக்கையில் அமர்ந்த நிலையில், தற்போது துணை முதலமைச்சர் ஆனதால் 3-வது இருக்கைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவை முன்னவர் துரைமுருகனுக்கு அடுத்த இடத்தில் உதயநிதிக்கு இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.
தற்போது, தமிழக சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.