ரிசர்வ் வங்கிக்கு புதிய ஆளுநர் – யார் இந்த சஞ்சய் மல்கோத்ரா?
ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சஞ்சய் மல்கோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி இந்தியாவில் உள்ள மைய வங்கியாகும். மக்கள் இந்த வங்கியை நேரடியாக பயன்படுத்த முடியாது. ஆனால் இந்திய ரிசர்வ் வங்கி தான் இந்தியாவில் உள்ள பிற வங்கிகளை கட்டுப்படுத்துகிறது.
இந்திய நாட்டின் நாணய மதிப்பு, ரிசர்வ் வங்கியின் கையிருப்பில் உள்ள தங்கம் மற்றும் ரொக்கம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்தே மதிப்பிடப்படுகிறது.மேலும், ரூபாய், நாணயங்கள் அச்சிடுவது, புதிய ரூபாய், நாணயங்கள் அறிமுகப்படுத்துவது ஆகியவை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் தான் நடைபெறும்.
சக்திகாந்த தாஸ்
ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்து வரும் சக்திகாந்த தாஸின் பதவிக்காலம் நாளையுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
டிசம்பர் 11ம் தேதி ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பதவியேற்கவுள்ள இவர், அடுத்த 3 ஆண்டுகளுக்கு இவர் அந்த பதவியில் செயல்படுவார்.
சஞ்சய் மல்ஹோத்ரா
சஞ்சய் மல்ஹோத்ரா 1990 ஆம் ஆண்டு ராஜஸ்தான் கேடர் ஐஏஎஸ் ஆவார். கான்பூரில் ஐஐடியில் கணினி அறிவியலில் பொறியியல் பட்டம் முடித்த இவர், அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொதுக் கொள்கையில் முதுகலைப் பட்டம் முடித்துள்ளார்.
தற்போது நிதி அமைச்சகத்தின் கீழ் வருவாய் துறை செயலளராக உள்ள இவர், இதற்கு முன், மல்ஹோத்ரா நிதிச் சேவைகள் துறையில் செயலாளராக இருந்தார், அங்கு அவர் வங்கி மற்றும் நிதித் துறைகளில் முக்கிய சீர்திருத்தங்கள் மற்றும் கொள்கை முடிவுகளை கையாண்டார்.
அதற்கு முன்னர் மின்சாரம், நிதி மற்றும் வரிவிதிப்பு, தகவல் தொழில்நுட்பம், சுரங்கங்கள் போன்ற பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார். மேலும், ஜிஎஸ்டி கவுன்சிலின் முன்னாள் செயலாளராக இருந்தார். சஞ்சய் மல்ஹோத்ரா மாநில மற்றும் மத்திய அரசில் நிதி மற்றும் வரி விதிப்பில் நீண்ட அனுபவம் பெற்றவர்.