விஷமிகளால் கொத்தி எரிக்கப்பட்ட ஆலய கதவு
ஆலடி பளை A9 வீதியில் அமைந்துள்ள ஶ்ரீ ஆத்திக்கண்டு வைரவர் திருக்கோயில் கதவு விஷமிகளால் கொத்தி எரியூட்டப்பட்டுள்ளது.
கடந்த 7ஆம் திகதி குறித்த சம்பவம் நடைபெற்றதோடு , விஷமிகள் மடப்பள்ளி கூரை வழியாக ஆலயத்தினுள்ளே இறங்கியதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
இது தொடர்பில் ஒழுங்கீனமாக செயற்படும் விஷமிகளுக்கு எதிராக பளை பொலிஸில் முறைப்பாடுசெய்யப்பட்டு , பொலிஸார் பார்வையிட்டதோடு மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். குறித்த விஷமிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆலய பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் கடந்த ஆனி மாதம் குறித்த ஆலய கும்பாபிஷேகம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.