உலகில் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடு : எது தெரியுமா !
உலகின் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் கனடா (Canada) முதலிடத்தை பிடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விடயமானது பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், கனடாவில் 59.96% படித்தவர்கள் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கல்வி அறிவு
அத்தோடு, 52.68% கல்வி அறிவுடன் ஜப்பான் (Japan) இரண்டாவது இடத்தில் உள்ளது.
லக்சம்பர்க் (Luxembourg) மூன்றாவது இடத்தை பிடித்துள்ள நிலையில் அமெரிக்கா (United States) மற்றும் பிரிட்டன் (United Kingdom) ஆகிய முன்னணி நாடுகள் ஆறு மற்றும் எட்டாவது இடத்தை பிடித்துள்ளது.
இந்த பந்தயத்தில் தென் கொரியா (South Korea) அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி நான்காவது இடத்திலுள்ளது.
கல்வி தகுதி மிகுந்த நாடுகளின் பட்டியலில் இஸ்ரேல் (Israel) ஐந்தாவது இடத்தை பிடித்துள்ள நிலையில், அயர்லாந்தை (Ireland) பின்னுக்கு தள்ளி பிரிட்டன் எட்டாவது இடத்திலுள்ளமை குறிப்பிடத்தக்கது.