அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் விசேட அறிவிப்பு
நாளைய தினம் (12) அஸ்வெசும பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் டிசம்பர் மாதத்துக்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு தொகையை வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அஸ்வெசும நலன்புரி நன்மைகள் சபை இதனைத் தெரிவித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் 13 ஆம் திகதி முதல் அஸ்வெசும பயனாளிகள் தங்களது வங்கிக் கணக்குகளிலிருந்து கொடுப்பனவு தொகையைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.