ஈரானுடன்… எதுவும் நடக்கலாம்: டொனால்டு ட்ரம்ப் வெளிப்படை
ஈரானுடன் போர் தொடுக்கும் வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள டொனால்டு ட்ரம்ப் எதுவும் நடக்கலாம் என பதிலளித்துள்ளார்.
கொந்தளிப்பான சூழ்நிலை
ஜனவரி 20ம் திகதி அமெரிக்காவின் புதிய ஜனாதிபத்கியாக மீண்டும் பொறுப்புக்கு வரவிருக்கிறார். இந்த நிலையில், டைம் இதழின் ஆண்டின் சிறந்த நபராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்டு ட்ரம்ப், ஈரான் தொடர்பில் தமது கருத்துகளை பதிவு செய்துள்ளார்.
எதுவும் நடக்கலாம் என குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், மிகவும் கொந்தளிப்பான சூழ்நிலையாக பார்ப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் ரஷ்யாவிற்குள் உக்ரைன் ஏவுகணைகளை வீசுவதுதான் இப்போது மிகவும் ஆபத்தான விடயம் என்று தாம் நினைப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இது பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்று அவர் தெரிவித்துள்ளார். ஈரான் மீது ஏற்கனவே டொனால்டு ட்ரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார். ட்ரம்பை கொல்ல ஈரான் திட்டமிட்டதாகவும் அமெரிக்க அரசாங்கம் வெளிப்படுத்தியிருந்தது.
உண்மைக்கு புறம்பானது
ஆனால் அது உண்மைக்கு புறம்பானது என ஈரான் பதிலளித்திருந்தது. 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக தனது முதல் பதவிக் காலத்தில், ஈரானின் உயர்மட்ட இராணுவத் தளபதி காசிம் சுலைமானியைக் கொன்ற ட்ரோன் தாக்குதலை ட்ரம்ப் உத்தரவிட்டிருந்தார்.
மேலும், ஈரானுடன் பராக் ஒபாமாவால் 2015ல் ஏற்படுத்திய அணுசக்தி ஒப்பந்தத்தை 2018ல் ட்ரம்ப் ரத்து செய்ததுடன், மீண்டும் அமெரிக்க பொருளாதாரத் தடைகளை விதித்தார். இந்த ஒப்பந்தம் யுரேனியத்தை செறிவூட்டும் ஈரானின் திறனை மட்டுப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.