;
Athirady Tamil News

கனடாவில் அதிகரிக்கும் கருணைக்கொலைகள்., 20 மரணங்களில் ஒன்று என உயர்வு

0

கனடாவில் நிகழும் மரணங்களில், 20 பேரில் ஒருவர் கருணைக்கொலை செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கனடாவில் மருத்துவ உதவியுடன் உயிரை மாய்த்துக்கொள்ளும் சேவை (Euthanasia) தொடர்ச்சியாக ஐந்தாவது ஆண்டாக அதிகரித்துள்ளது. ஆனால் அதிகரிப்பு வீதம் முந்தைய ஆண்டுகளை விட மந்தமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

2016-ஆம் ஆண்டு கனடாவில் இந்த சேவை சட்டபூர்வமாக்கப்பட்ட பிறகு, இதுகுறித்து அரசாங்கம் ஐந்தாவது ஆண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில், 2023-ஆம் ஆண்டு, சுமார் 15,300 பேர் மருத்துவ உதவியுடன் மரணிக்க (கருணைக்கொலை செய்யப்பட) தேர்வு செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

இது நாட்டின் மொத்த மரணங்களின் 4.7% ஆகும். அதாவது, கிட்டத்தட்ட 20 பேரில் ஒருவர் இவ்வாறு மரணிக்கின்றனர்.

இந்த சேவையை தேர்ந்தெடுத்தவர்களின் 96% பேருக்கு இயல்பான மரணம் எதிர்பார்க்கப்பட்டது. மீதமுள்ள 4% பேர் நீண்டகாலம் நோயுற்ற நிலைமையில் இருக்கும் காரணத்தால் இதைத் தேர்வு செய்துள்ளனர்.

இச்சேவையை நாடுவோரின் சராசரி வயது 77-ஆக உள்ளது, மேலும் இதில் புற்றுநோயே அதிகபட்ச காரணமாகக் காணப்பட்டுள்ளது.

மூன்றில் ஒரு பங்கைவிட அதிகமான கருணைக்கொலைகள் கியூபெக்கில் நடைபெற்றுள்ளன.

தற்போது வெளிவந்துள்ள இந்த அறிக்கையில் முதன்முறையாக இன-தரவு வழங்கப்பட்டுள்ளது. இதில் 96% பேரும் வெள்ளை இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் 1.8% பேர் கிழக்கு ஆசியர்களாக இருந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனநலம் சார்ந்த நோயாளிகளுக்கும் 2027-க்குள் சேவையை வழங்க சட்டம் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சில பிரச்சினைகள், உதாரணமாக, வீடற்றவர்கள் அல்லது தேவையான உதவிகள் கிடைக்காமல் அவதிப்படும் சிலர் இந்த சேவையை நாடியுள்ளனர் என்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.