;
Athirady Tamil News

சர்வதேச கனிஷ்ட விஞ்ஞான போட்டியில் பதக்கம் வென்ற இலங்கை மாணவர்கள்

0

ருமேனியாவில் நடைபெற்ற 21ஆவது சர்வதேச கனிஷ்ட விஞ்ஞான ஒலிம்பியாட் – 2024 இல் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பதக்கங்களை வென்ற 06 இலங்கை மாணவர்கள் இன்று (13) நாட்டை வந்தடைந்தனர்.

இவர்கள் இன்று காலை 9.30 மணியளவில் துபாயிலிருந்து Fly Dubai Airlines இன் FZ-1025 விமானத்தினூடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

52 நாடுகளைச் சேர்ந்த 315 மாணவர்கள் பங்கேற்ற இந்தப் போட்டி ருமேனியாவின் புக்கரெஸ்டில் டிச. 02 -11ஆம் திகதி வரை நடைபெற்றது.

குறித்த போட்டியில் கலந்து கொண்ட வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் பி.காசிபல், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த வி.ஸ்ரீராம், கண்டி புனித சில்வெஸ்டர் கல்லூரியின் சித்துமினி சமரகோன்,

பொலன்னறுவை றோயல் கல்லூரியின் அனுஷ்கா இதுவர மற்றும் காலி ரிச்மண்ட் கல்லூரியின் தெனுக விக்ரமரத்ன ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களை வென்றனர்.

இதுதவிர கண்டி புனித சில்வெஸ்டர் கல்லூரியை சேர்ந்த ஹசிது நவரத்ன ஆகியோர் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.

குறித்த மாணவர்களை வரவேற்பதற்காக மாணவர்களின் வரவேற்பதற்காக அவர்களின் பெற்றோரும் விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்நதனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.