பிரான்சில் இடம்பெயர்ந்தோர் முகாமில் துப்பாக்கிச் சூடு
பிரான்சில் (France) டன்கிர்க் அருகே இடம்பெயர்ந்தோர் முகாமில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சம்பவத்தில் ஐவர் கொல்லப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேக நபர்
இந்தநிலையில், ஐந்தாவதாக கொல்லப்பட்டவர் முகாமுக்கு வெளியே கொல்லப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் அருகிலுள்ள காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.