சுவிட்சர்லாந்தில் ஒரே ஆண்டில் 25 ATM இயந்திரங்களை வெடிவைத்து தகர்த்த கொள்ளையர்கள்
சுவிட்சர்லாந்தில் ATM இயந்திரங்களை வெடிவைத்து தகர்த்து கொள்ளையடிக்கும் சம்பவங்கள் வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளன.
25 ATM இயந்திரங்கள் வெடிவைத்து தகர்ப்பு
டிசம்பர் நிலவரப்படி, இந்த ஆண்டில் இதுவரை சுவிட்சர்லாந்தில் 25 ATM இயந்திரங்களை வெடிவைத்து தகர்த்து கொள்ளையடித்துச் சென்றுள்ளார்கள் கொள்ளையர்கள்.
இந்த எண்ணிக்கையில், கொள்ளை முயற்சிகள் இரண்டு சேர்க்கப்படவில்லை. மே மாதத்தில் Langnauவிலும், நவம்பரில் Wynigenஇலும், ATM இயந்திரங்களை வெடிவைத்து தகர்த்து கொள்ளையடிக்கும் முயற்சியில் தோல்வியடைந்தார்கள் கொள்ளையர்கள்.
கடந்த ஆண்டிலோ, 22 முறை ATM இயந்திரங்கள் தாக்கப்பட்டன. என்றாலும், அவற்றில் பாதி கொள்ளை முயற்சிகள் தோல்வியடைந்ததால் அந்த ATM இயந்திரங்களில் இருந்த பணம் தப்பியது.