;
Athirady Tamil News

இருதலையுடன் இருக்கும் வித்தியாசமான உயிரினம்: முழு விபரம் இதோ

0

தற்போது இணையத்தில் இருதலையுடன் இருக்கும் ஒரு உயிரினம் பற்றிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இருதலை உயிரினம்
இயற்கையில் காணப்படும் சில அதியசமான விடயங்கள் நமக்கு வியப்பாக இருக்கும். பொதுவாக மனிதர்கள் அறிவு குறைவாக கருதப்படும் விலங்குகள் பறவைகள் செய்யும் சாகசங்கள் ஏராளம்.

இது நமக்கு புதிதானவையாகவும் இருக்கலாம்.இந்த காரணத்தினால் தான் மனிதர்களுக்கு இயற்கையின் மீது எப்போதும் ஆர்வம் அதிகம். அப்படி தான் தற்போது ஒரு விலங்கு பற்றிய தகவல் இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

பொதுவாக விலங்குகள் பூச்சி சாப்பிடுவது வழக்கம். அந்த வகையில் Buitengebiden என்ற ட்விட்டர் கணக்கு மூலம் ஒரு வீடியோ வெளியிடப்பட்டது. வீடியோவில், ஒரு விசித்திரமான ராட்சத விலங்கு பூச்சிகளை சாப்பிடுவது போல காணப்படுகின்றது.

இது சாதாரண ஒரு விலங்காக இருந்தாலும் இதற்கு இரண்டு தலை இருப்பதே அதிசயம்.இந்த விலங்கின் பெயர் Anteater (எறும்பு உண்ணி). இது எறும்புத் தின்னும் உயிரினம்.

இது இரண்டு தலையுடனும் உணவை உண்ணும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவை Buitengebiden என்ற ட்விட்டர் கணக்கு மூலம் பார்வை இடலாம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.