;
Athirady Tamil News

இபோச பேருந்தில் மோதி பெண் மரணம்; சாரதி மற்றும் நடத்தினர் நையப்புடைப்பு

0

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இபோச பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனரை தாக்கிய நபர்களை கைது செய்யுமாறு ஹட்டன் இபோச டிப்போவின் கட்டுப்பாட்டு அதிகார சபை வெல்லம்பிட்டி பொலிஸாரிடம் கோரியுள்ளது.

பெண் ஒருவர் குறித்த பேருந்தில் மோதி உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், பொதுமக்கள் சாரதி மற்றும் நடத்தினர் மீது தாக்குதலை மேற்கொண்டனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

அடிக்க வேண்டாம் என கையெடுத்து கும்பிட்ட சாரதி
கொழும்பு- ஹட்டன் தடவழி இபோச பேருந்து ஒன்று வெல்லம்பிட்டிய கொட்டிகாவத்தை பகுதியில் மோட்டார் சைக்கிள் வீதியின் குறுக்கே சறுக்கி விழுந்த போது அதில் பயணித்த பெண் மீது பேருந்து ஏறி உயிரிழந்துள்ளார் .

இதனையடுத்து , பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் கோபமடைந்து அவர்களை கொடூரமாக தாக்கியுள்ளனர். சாரதி தன்னைத் தாக்க வேண்டாம் என கெஞ்சிய போதும், மக்கள் அவரைத் தொடர்ந்து தாக்கியதனால், சாரதிக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

பொதுமக்களின் தாக்குதலில் காயமடைந்த பேருந்தின் சாரதி வெல்லம்பிட்டி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டும் என கூறப்பட்ட போதிலும் வெல்லம்பிட்டி பொலிஸ் அதிகாரிகள் , சாரதியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை.

விபத்து தொடர்பான சட்டத்தை உரிய முறையில் நிறைவேற்றுவது பொலிஸாரின் பொறுப்பாகும் என டிப்போ கட்டுப்பாட்டு அதிகாரசபை கூறியுள்ளது. அத்துடன், பொலிஸார் தமது பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்றிய போதிலும், விபத்து இடம்பெற்ற இடத்தில் இருந்த சிலர் சாரதியையும் , நடத்துனரையும் , தாக்கியுள்ளதை வன்மையாக கண்டித்துள்ளார்.

சாரதி மற்றும் நடத்துனரை தாக்கிய நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வெல்லம்பிட்டி காவற்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால், ஹட்டன் இபோச டிப்போ ஊழியர்கள் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக கட்டுப்பாட்டு அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

அதேவேளை சம்பவம் இடம்பெற்றபோது பேருந்தில் இருந்த பயணி ஒருவர் சாரதியையும் , நடத்துனரையும் , தாக்கியதை செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.