;
Athirady Tamil News

மீட்டியாகொட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் நால்வர் கைது

0

மீட்டியாகொட, மஹவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மீட்டியகொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி, நேற்று (16) பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

நேற்றிரவு முச்சக்கர வண்டியில் வந்த சிலர், வீடொன்றில் இருந்த ஆண் ஒருவர் மீதும் அவரது மகளும் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் தந்தையின் வயிற்றுப் பகுதியிலும் மகளின் கால் பகுதியிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.