ரஷ்யாவை திணறவைத்த ஜெனரலின் படுகொலை: பின்னணியில் இருந்த உளவு அமைப்பு
ரஷ்யாவின் (Russia) அணு, உயிரியல் மற்றும் இரசாயன பாதுகாப்பு படைகளின் தலைவராக இருந்த லெப்டினன்ட் ஜெனரல் இகோர் கிரில்லோவ் (Igor Kirillov) உக்ரைனின் SBU உளவுத்துறையால் கொலை செய்யப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உக்ரைனுக்கு எதிராக இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ரஷ்ய உயர்மட்ட ஜெனரல் ஒருவர் மாஸ்கோவில் படுகொலை செய்யப்பட்டார்.
SBU உக்ரேனிய அமைப்பு
ரஷ்யாவின் அணு, உயிரியல் மற்றும் இரசாயன பாதுகாப்பு படைகளின் தலைவராக இருந்த லெப்டினன்ட் ஜெனரல் இகோர் கிரில்லோவ், அவரது உதவியாளருடன் அடுக்குமாடி கட்டிடத்திற்கு வெளியே மின்சார ஸ்கூட்டரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் கொல்லப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
இதன் பின்னணியில், SBU என்ற உக்ரேனிய புலனாய்வு அமைப்பு இருப்பதாகவும் கடுமையான குற்றங்களை விசாரிக்கும் ரஷ்யாவின் விசாரணைக் குழு உறுதிப்படுத்தியுள்ளது.
ரஷ்யா பாதுகாப்பு
இந்த நிலையில், 54 வயதான கிரில்லோவ், ரஷ்யாவிற்குள் உக்ரைனால் படுகொலை செய்யப்பட்ட மிக மூத்த ரஷ்ய இராணுவ அதிகாரி என கூறப்படுகிறது.
இதேவேளை, அவரது கொலை, இராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகளுக்கான பாதுகாப்பு நெறிமுறைகளை மறுபரிசீலனை செய்ய ரஷ்யாவை தூண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.