விளாடிமிர் புடினால் எற்படவிருக்கும் அச்சுறுத்தல்… பிரித்தானிய பிரதமர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினால் பிரித்தானியாவுக்கு ஏற்படவிருக்கும் அச்சுறுத்தல் தொடர்பில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் முதல் முறையாக தகவல் பகிர்ந்துகொண்டுள்ளார்.
கடற்படை தலைமையகத்தில்
நோர்வே மற்றும் பிரித்தானியாவும் புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுத்துள்ளது. ரஷ்யாவால் ரகசிய தரவுகள் பல திருடப்படும் மிக ஆபத்தான நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதை அடுத்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளது.
மட்டுமின்றி, இருநாடுகளின் உளவுத்துறையும், ரஷ்யா போன்ற நாடுகளால் அமைக்கப்படும் ஒட்டுக்கேட்கும் கருவிகள் தொடர்பிலும் நடவடிக்கை எடுக்க ஒப்புக்கொண்டுள்ளது.
ரஷ்யாவுக்கு மிக அருகே நோர்வே அமைந்துள்ளதால், புடின் தனது விளையாட்டை மிக எளிதாக முன்னெடுக்க முடியும் என்றும் உளவு அமைப்புகள் சுட்டிகாட்டியுள்ளன.
10 நாடுகளின் சிறப்பு மாநாடை முன்னிட்டு, நோர்வே கடற்படை தலைமையகத்தில் வைத்து பிரித்தானிய பிரதமர் சர் கெய்ருக்கு உயர்மட்ட உளவுத்துறை தரவுகள் வழங்கப்பட்டது.
இதில், ரஷ்யாவால் உள்ளூர் பாதுகாப்பு சீர்குலைப்பு, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல், மின்சாரம் அல்லது எரிவாயு குழாய்களை துண்டித்தல் உட்பட, பிரித்தானியாவை மொத்தமாக ஸ்தம்பிக்க வைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படலாம் என்றே எச்சரிக்கப்பட்டுள்ளது.
பாதுகாக்கும் நடவடிக்கைகளில் கவனம்
ரஷ்யாவின் அச்சுறுத்தல் குறித்து நன்கு உணர்ந்துள்ள பிரதமர் ஸ்டார்மர், பிரித்தானியா மற்றும் நேச நாடுகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவார் என்றே கூறப்படுகிறது.
நோர்வேயின் 930 மைல் கடல் எல்லை மற்றும் 125 மைல் நிலப்பரப்பு ரஷ்யா எல்லையில் அமைந்துள்ளதால், ரஷ்ய ஒட்டுக்கேட்கும் முயற்சிகளின் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
இந்த நிலையில், 2021 முதல் நோர்வேயில் பிரித்தானியாவின் பாதுகாப்பு நடவடிக்கைகள் மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலதிகமாக 5,000 இராணுவ வீரர்கள் ஆண்டு தோறும் பயிற்சி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.