;
Athirady Tamil News

கணினி வேலையால் மன அழுத்தம்.., கையின் 4 விரல்களையும் வெட்டி தூக்கி எறிந்த ஊழியர்

0

பணியால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக ஊழியர் ஒருவர் தனது கையின் 4 விரல்களையும் வெட்டி தூக்கி எறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விரல்களை வெட்டிய நபர்
இந்திய மாநிலமான குஜராத், சூரத் நகரை சேர்ந்தவர் மயூர் தராபரா (32). இவருக்கு திருமணமாகி 2 வயதில் ஒரு பெண் குழந்தை இருப்பதாக சொல்லப்படுகிறது.

இவர் தனது தந்தை உறவினரின் அனப் ஜெம்ஸ் என்ற வைர நிறுவனத்தில் கணினி ஆப்பரேட்டராக பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில், இவருடைய இடது கையின் 4 விரல்கள் வெட்டப்பட்டது தொடர்பாக அவரது குடும்பத்தினர் பொலிஸில் புகார் அளித்துள்ளனர்.

அப்போது சாலையில், தான் மயங்கி விழுந்ததில் இருந்து விரல்களை காணவில்லை என்று மயூர் கூறியுள்ளார். முதலில், சூனியம் செய்யும் எண்ணத்தில் அவருடைய விரல்கள் வெட்டப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகப்பட்டனர்.

ஆனால், மயூரின் வாகனம், தொலைப்பேசி, பணம் ஆகியவை திருடப்படாமல் இருந்தது தெரியவந்தது. பின்னர், நடத்தப்பட்ட விசாரணையில் மயூர் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.

அவர் கூறுகையில், “கடந்த வாரத்தில் சிங்கன்பூரில் உள்ள சார் ரஸ்தா அருகே உள்ள கடையில் கத்தி ஒன்றை வாங்கினேன்.

பின்னர், ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கு அம்ரோலி ரிங் ரோடுக்கு சென்று வண்டியை நிறுத்தி இடதுகையின் 4 விரல்களை வெட்டினேன்.

அப்போது, ரத்தம் கசியாமல் இருக்க முழங்கையின் அருகே கயிறை இறுக்கமாக கட்டினேன். அதன்பிறகு, வெட்டப்பட்ட விரல்களை பையில் போட்டு தூக்கி எறிந்தேன்.

தந்தையின் உறவினர் நிறுவனத்தில் எனக்கு வேலை செய்ய எனக்கு விரும்பவில்லை. இதை யாரிடமும் சொல்ல எனக்கு தைரியம் இல்லை. விரலை வெட்டிக்கொண்டால் கணினியில் வேலை செய்ய முடியாது என்பதால் இவ்வாறு செய்தேன்” என்று வாக்குமூலம் கொடுத்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.