;
Athirady Tamil News

பிரித்தானிய விமான பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் அல்லது புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக விமானத்தில் பயணம் செய்ய உள்ளவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சில தடைசெய்யப்பட்ட பொருட்களைக் கொண்டுவருவதை தாமாகவே தவிர்க்க வேண்டும், இல்லையெனில் விமான நிலையத்தில் தாமதம் சந்திக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெடிமருந்துள்ள பட்டாசுகள், எளிதில் எரியக்கூடிய அல்லது தீப்பற்றக்கூடிய பொருட்களை விமானத்தில் கொண்டுசெல்ல தடை செய்யப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் பட்டாசுகள் (Christmas crackers) மற்றும் பார்ட்டி பாப்பர்கள் (party poppers) போன்ற பொருட்களையும் அதன் வெடிப்பு தன்மை காரணமாக பயணிகள் விமானத்தில் கொன்டுசெல்ல தடை செய்யப்படுகிறது.

பிரித்தானியாவின் Civil Aviation Authority (UK CAA) வெளியிட்ட அறிவுறுத்தலின்படி, கிராக்கர்களை சில விமான சேவைகள் மட்டுமே ஏற்றுக் கொள்கின்றன. எனவே பயணத்திற்கு முன்பு உங்கள் விமான நிறுவனத்துடன் அதனை உறுதி செய்ய வேண்டும்.

கிறிஸ்துமஸ் கிராக்கர்களை முழுமையாக தடை செய்துள்ள விமான நிறுவனங்கள்:
Air France

Air India

American Airlines

Delta

Emirates

Etihad

KLM

Lufthansa

Luxair

Qatar Airways

Ryanair

Swiss Airlines

Wizz Air

விமான பயணத்தில் மேலும் சில பொருட்களை கொண்டுசெல்வதை விமான நிறுவனங்கள் தடை செய்துள்ளன. ஒவ்வொரு விமான நிறுவனமும் வெவ்வேறு தனிப்பட்ட பட்டியலை கொண்டுள்ளன.

விமானத்தில் கையில் எடுத்துச்செல்லும் உடமைகளில், Wrap செய்யப்பட பரிசுப்பொருட்கள் இருக்கக்கூடாது.

பொம்மை துப்பாக்கிகள், நீர் கைத்துப்பாக்கிகள், Slingshot, ஈட்டிகள் மற்றும் விளையாட்டு மட்டைகள் போன்ற ஆயுதங்களைப் போல தோற்றமளிக்கும் பொம்மைகளை hold luggage-லேயே பேக் செய்வது நல்லது.

மேலும், Snow globes, இறைச்சி, சட்னிகள், brandy butter இதே போன்ற நிலைத்தன்மையுள்ள பிற உணவுப் பொருட்கள் தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அல்லது, பயணிகள் இந்த பொருட்களை கையாளும்போது பாதுகாப்பு விதிகளை கடைபிடித்து செயல்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.