;
Athirady Tamil News

முல்லைத்தீவு கடலில் மீட்கப்பட்டவர்கள் குறித்து வெளியான தகவல்

0

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் வெளிநாட்டு பிரஜைகள் 103 பேருடன் படகொன்று வியாழக்கிழமை (19) கரையொதுங்கியுள்ளது.

குறித்த படகு மியன்மாரில் இருந்து 103 பயணிகளுடன் திசைமாறி வந்து கரையொதுங்கியுள்ளது. படகில் 25 க்கும் மேற்பட்ட சிறுவர்களும் உள்ளடங்கியிருக்கின்றனர்.

அவர்களை மீட்டு கரைக்கு கொண்டுவரும் நடவடிக்கையில் முல்லைத்தீவு மீனவர்கள், கடற்படையினர், இராணுவத்தினர், பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

திருகோணமலையில் இருந்து கடற்படை படகு
வைத்தியர்களின் ஓய்வு வயதெல்லையை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி
வைத்தியர்களின் ஓய்வு வயதெல்லையை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி
குறித்த படகில் இருப்பவர்களுக்கு உணவுகள், உலருணவுகளை முல்லைத்தீவு மீனவர் சங்கத்தினர் வழங்கினர். அதேவெளை படகில் இருந்தவர்களில் சிலர் மயக்கமடைந்த நிலையிலும், சிலர் சுகயீனமுற்ற நிலையிலும் உள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களை நேரில் சென்று முல்லைத்தீவு மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர், கடற்படையினர், பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டவர்கள் பார்வையிட்டு நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளனர்.

படகிலிருந்து மீட்கப்பட்டவர்களை, திருகோணமலையில் இருந்து கடற்ப்படை படகு ஒன்று வருகைதந்து அங்கு மீட்டுச் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.