பறிமுதல் செய்யப்பட்ட ரஷ்யாவின் ஒலிகார்ச் படகு: பராமரிப்புக்கு $30 மில்லியன் செலவிடும் அமெரிக்கா
பறிமுதல் செய்யப்பட்ட ரஷ்ய ஒலிகார்ச்சின் படகை பராமரிக்க அமெரிக்கா $30 மில்லியன் செலவிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
$30 மில்லியன் செலவு
உக்ரைன் ரஷ்யா போரை தொடர்ந்து அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மற்றும் அதன் செல்வந்தர்கள் மீது பொருளாதார தடையை அறிவித்தன.
மேலும் ரஷ்ய செல்வந்தர்களின் சொத்துக்களையும் பறிமுதல் செய்தனர்.
U.S. spent $30 million maintaining a yacht belonging to a Russian billionaire
The vessel in question is the confiscated yacht Amadea, owned by Russian oligarch Suleiman Kerimov. The cost of maintaining the yacht amounted to $30 million for the U.S. government.
More than half of… pic.twitter.com/sOQYldNAut
— NEXTA (@nexta_tv) December 20, 2024
அந்தவகையில் ரஷ்யாவின் ஒலிகார்ச்(Russian oligarch) சுலைமான் கெரிமோவ்-வுக்கு(Suleiman Kerimov) சொந்தமான அமேடியா(Amadea) கப்பலை அமெரிக்கா பறிமுதல் செய்தது.
இந்நிலையில் ரஷ்ய ஒலிகார்ச்சின் படகான அமேடியா-வை பராமரிக்க சுமார் $30 மில்லியன் டொலர்களை அமெரிக்கா செலவிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
$30 மில்லியன் செலவில் ஒரு குறிப்பிடத்தக்க பகுதி, ஃபிஜியிலிருந்து அமெரிக்க துறைமுகத்திற்கு அமேடியாவை கொண்டு செல்ல செலவிடப்பட்டது.
இதில் பெரும்பாலான செலவுகள் தேசிய கடல்சார் சேவைகள் நிறுவனத்தால் ஏற்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.