;
Athirady Tamil News

அனலைதீவை அபிவிருத்தி செய்வோம் – கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

0

கிராமங்களை நோக்கியே அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருவதனால் , அனலைதீவையும் அபிவிருத்தி செய்வோம் என அப்பகுதி மக்களுக்கு கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதி அளித்துள்ளார்.

அனலைதீவுக்கு நேற்றைய தினம் சனிக்கிழமை கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் உ இளங்குமரன் ஆகியோர் நேரில் விஜயம் செய்திருந்தனர்.

அதன் போது அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட போது, கடற்தொழிலாளர்கள் , விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாகவும், சமூக மட்டங்களில் நிலவும் ஏனைய பிரச்சனை தொடர்பாகவும் மக்களால் அமைச்சரிடம் எடுத்து கூறப்பட்டது.

அதன் போது , அனலைதீவு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை தாம் அறிந்து வைத்துள்ளதாகவும் , குறிப்பாக மின்சாரம் , படகு போக்குவரத்து பிரச்சனைகள் தொடர்பில் அறிந்துள்ளதாகவும், அவற்றை தீர்க்க பொறிமுறைகளை உருவாக்க உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன் எமது அரசாங்கம் கிராமங்களை நோக்கியே அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதனால் , அனலைதீவிலும் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டு இப்பகுதியை அபிவிருத்தி செய்வோம் என அப்பகுதி மக்களுக்கு அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.