லண்டன் திரும்ப வேண்டும்… விவாகரத்து கோரும் தப்பியோடிய சிரிய ஜனாதிபதியின் மனைவி
ரஷ்யாவில் தற்போது தஞ்சமடைந்துள்ள சிரிய ஜனாதிபதி அசாதின் காதல் மனைவி அஸ்மா விவாகரத்து கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டை விட்டு வெளியேற
மீண்டும் பிரித்தானியாவுக்கே திரும்பவும் அவர் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மாஸ்கோ வாழ்க்கையில் உடன்பாடில்லை என அஸ்மா கூறி வருவதாகவும் துருக்கி மற்றும் அரேபிய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
அஸ்மா நாட்டை விட்டு வெளியேற சிறப்பு அனுமதி கோரி ரஷ்ய நீதிமன்றத்தில் விண்ணப்பித்ததாக கூறப்படுகிறது, தற்போது அவரது விண்ணப்பம் ரஷ்ய அதிகாரிகளால் பரிசீலனையில் உள்ளது.
சிரிய பெற்றோருக்கு லண்டனில் பிறந்த அஸ்மா, இரட்டைக் குடியுரிமையை பேணுபவர். அஸ்மா டிசம்பர் 2000 இல் பஷர் அல்-அசாத்தை மணந்தார். மூன்று பிள்ளைகளுக்கு தாயாரான அஸ்மா, சிரிய எழுச்சி தொடங்கியதில் இருந்தே தமது குழந்தைகளுடன் லண்டனுக்கு தப்பிவர முயன்றுள்ளார்.
ரஷ்யாவிடம் தஞ்சம் கோரியுள்ள அசாத் மீது ரஷ்ய நிர்வாகம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அவரது புகலிடக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்ட போதிலும், அவர் மாஸ்கோவை விட்டு வெளியேறவோ அல்லது அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.
மொத்த சொத்துகளையும்
மட்டுமின்றி, 270 கிலோ தங்கம், 2 பில்லியன் டொலர் ரொக்கம் மற்றும் மாஸ்கோவில் உள்ள 18 சொத்துக்கள் உள்ளிட்ட அவரது மொத்த சொத்துகளையும் ரஷ்ய அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.
50 ஆண்டுகளுக்கும் மேலாக சிரியாவை ஆட்சி செய்துள்ள அசாத் குடும்பம், இறுதியில் கிளர்ச்சியாளர்கள் படை மற்றும் பொதுமக்களால் நெருக்கடியை எதிர்கொண்டனர். தலைநகரை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்களால் அசாத் தப்பியோடும் நிலைக்கு தள்ளப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.