ஆயுதங்களுடன் சென்ற ரஷ்ய ராணுவ சரக்குக் கப்பல் நடுக்கடலில் பழுது
ஆயுதங்களை ஏற்றிச் சென்றுக்கொண்டிருந்த ரஷ்ய ராணுவ சரக்குக் கப்பல் போர்ச்சுகல் நடுக்கடலில் பழுதடைந்து நின்றது.
சிரியாவிலிருந்து இராணுவ உபகரணங்கள் மற்றும் ஆயுதங்களை கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்ட ரஷ்ய இராணுவ சரக்குக் கப்பல், போர்த்துகீசிய கடற்கரைக்கு அருகே பழுதடைந்தது.
ஸ்பார்டா (Sparta) என அழைக்கப்படும் இக்கப்பல், பழுதாகி நின்றதால் ஆழ்கடலில் அடித்து செல்கின்ற நிலையில் உள்ளது.
கப்பலின் எரிபொருள் குழாயில் ஏற்பட்ட பெரிய கோளாறு அதன் இயக்கத்தை முற்றிலும் நிறுத்தி விட்டதாக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அக்கப்பல் குழுவினர் அதை சரிசெய்ய முயற்சி செய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிரியாவில் ரஷ்யாவின் நிலைமை
சிரியாவில் இருந்து ரஷ்ய படைகள் திரும்பி செல்கிற நிலையில், தற்போது ரஷ்ய இராணுவம் கமீமிம் விமானத் தளம் மற்றும் டார்டஸ் கடல் துறைமுகம் ஆகிய முக்கிய இரு தளங்களில் மட்டுமே தங்கி இருக்கிறது.
டார்டஸ் தளத்தில் இருந்த சில ஆயுதங்கள் மற்றும் கருவிகள் லிபியாவுக்கு கடல்மார்க்கமாக மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், ரஷ்ய படைகள் முழுமையாக சிரியாவில் இருந்து வெளியேறுவது பற்றியும் கருத்துகள் நிலவுகின்றன.
சிரியாவின் புதிய ஆட்சி, 2025 பிப்ரவரி 20-ஆம் திகதிக்குள் கமீமிம் மற்றும் டார்டஸ் தளங்களை ரஷ்யா விடுவிக்க வேண்டும் என வலியுறுத்த வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, சிரியாவில் இருந்து உக்ரைன் இரகசிய விவகாரத் துறையுடன் கூட்டு பணியில், 31 உக்ரைன் குடிமக்கள் மற்றும் 3 சிரியர்கள் உள்பட மொத்தம் 34 பேரை பாதுகாப்பாக மீட்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வுகள், ரஷ்யாவின் சர்வதேச ராணுவ நடவடிக்கைகளிலும், மத்திய கிழக்கு அரசியலிலும் புதிய மாற்றங்களை உருவாக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.