ஸ்காட்லாந்தில் தரையில் விழுந்த சிறிய விமானம்: 50 வயதுடைய விமானிக்கு நேர்ந்த துயரம்
ஸ்காட்லாந்தில் ஏற்பட்ட சிறிய விமான விபத்தில் விமானி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
விமான விபத்து
டிசம்பர் 23ம் திகதி, ஸ்காட்லாந்தின் பைஃப் விமான நிலையம்(Fife Airport) அருகே சிறிய விமானம் ஒன்று நிலத்தில் மோதியதில் பயங்கர விபத்து நிகழ்ந்தது.
இதில் 50 வயதான விமானி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பத்து நடந்த இடத்திற்கு மீட்பு ஹெலிகாப்டர் மற்றும் ஸ்காட்டிஷ் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை (SFRS) இலிருந்து வல்லுநர் குழுக்கள் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டன.
காலை 11:38 மணிக்கு அவர்களுக்கு அழைப்பு வந்ததாகவும், உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று உதவியதாகவும் SFRS உறுதிப்படுத்தியது.
விபத்து குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள விமான விபத்து விசாரணைப் பிரிவு (AAIB) நடவடிக்கை எடுத்துள்ளது.
விபத்து காரணத்தை தீர்மானிக்க ஆய்வாளர்கள் குழு தற்போது சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர்.
விபத்தில் வேறு யாரும் காயமடையவில்லை என்றும், விசாரணை தொடர்ந்து வருவதாகவும் ஸ்காட்லாந்து பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பைஃப் விமான நிலையம் முதன்மையாக உள்ளூர் விமான கிளப்புகளால் பயன்படுத்தப்படும் ஒரு சிறிய விமான நிலையமாகும்.