;
Athirady Tamil News

50,000 ஆண்டுகளுக்கு முந்தைய மாமத் குட்டியின் உடல்: ரஷ்யாவின் யாகுடியாவில் கண்டுபிடிப்பு

0

ரஷ்யாவின் யாகுடியாவில் உள்ள விஞ்ஞானிகள் ஒரு முன்னோடி கண்டுபிடிப்பை செய்துள்ளனர்.

50,000 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வயதுடைய குட்டி மாமத்தின் எச்சங்கள் இதுவாகும்.

இந்த மிகவும் நன்கு பாதுகாக்கப்பட்ட மாதிரி வரலாற்றில் மிகவும் முக்கியமான மாமத் கண்டுபிடிப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

2024 ஆம் ஆண்டின் கோடையில் வெர்கோயன்ஸ்க்(Verkhoyansk) மாவட்டத்தின் படகைகா(Batagaika) பகுதியில் இந்த கண்டுபிடிப்பு வெளிப்பட்டது.

உள்ளூர் மக்களின் துரித நடவடிக்கை
உருகும் பனிப்பாறையில் இருந்து மாமத்தின்(Mammoth) உடலின் முன்பகுதி வெளிப்படுவதை உள்ளூர்வாசிகள் தற்செயலாக கண்டறிந்தனர்.

அவர்கள் புத்திசாலித்தனமாக எச்சங்களை பனிப்பாறையில் பாதுகாத்து விஞ்ஞானிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர்.

பின் தொடர்ந்து நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் உடலின் பின்பகுதியும் வெளிப்பட்டது.

யானா என பெயரிடப்பட்ட மாமத்
யானா(Yana) என்று அன்புடன் பெயரிடப்பட்ட மாமத் இறக்கும் போது சுமார் ஒரு வயதுடையது என்பது தெரியவந்துள்ளது.

180 கிலோகிராம் எடையுள்ளதாகவும், 120 சென்டிமீட்டர் உயரமுள்ளதாகவும் இருந்த யானா, இந்த தொன்மையான உயிரினங்களின் வாழ்க்கை முறை குறித்து மதிப்புமிக்க தகவல்களை வழங்குகிறது.

மாமத்தின் தலை மிகவும் சிறப்பாக பாதுகாக்கப்பட்டுள்ளது, இது அதன் உடற்கூறியல், உடலியல் மற்றும் உணவு பழக்கம் பற்றிய முன்னோடி இல்லாத தகவல்களை அளிக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.