பிஞ்சு குழந்தை முன் தந்தை சுட்டுக்கொல்லப்பட்ட மீகொட கொலை சம்பவம் தொடர்பான மேலும் 03 பேர் கைது!
மீகொட, நாகஹவத்தை பிரதேசத்தில் கடந்த 14ம் தேதி ஒன்றரை வயது குழந்தை மற்றும் அவரது மனைவியுடன் காரில் பயணித்த நபரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற குற்றத்துடன் தொடர்புடைய மேலும் மூவர் ஹோமாகம மற்றும் மீகொட பொலிஸ் நிலைய பகுதிகளில் நேற்று (22) பிற்பகல் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேகநபர்கள் 22, 26 மற்றும் 38 வயதுடைய பாதுக்க மற்றும் மீகொட பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர்.
கடந்த 19ஆம் திகதி, இந்தக் குற்றச் சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிச் சூடு நடத்தியதாகச் செயற்பட்ட சந்தேகநபரும், அதற்கு உறுதுணையாக இருந்த மற்றுமொரு சந்தேக நபரும் புலனாய்வுப் பிரிவினரால் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.
குறித்த சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில் ஏனைய மூன்று சந்தேகநபர்களும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திய நபருடன் இந்தக் குற்றத்தைச் செய்ய வந்தவர் என்பதும் மற்றைய இருவர் குற்றத்திற்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாண தென் குற்றப்பிரிவு மற்றும் மீகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.