யாழில். சந்தைக்கு வாழைக்குலை கொண்டு சென்றவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்
சந்தைக்கு மோட்டார் சைக்கிளில் வாழைக்குலை கொண்டு சென்றவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம், அச்சுவேலி பகுதியை சேர்ந்த தேவதாசன் உதயசேனா (வயது 64) என்பவரே உயிரிழந்துள்ளார்.
தோட்டத்தில் இருந்து வாழைக்குலைகளை மோட்டார் சைக்கிளில் கட்டி , சந்தைக்கு விற்பனைக்காக எடுத்து சென்ற போது , வீதியில் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
வீதியில் சென்றவர்களை அவரை மீட்டு , வைத்தியசாலையில் அனுமதித்த போது , அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.
இதய வால்வு சுருக்கம் காரணமாகவே மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது