389 சிறைக்கைதிகளுக்கு விசேட பொது மன்னிப்பு!
இலங்கையில் நத்தார் பண்டிகையை முன்னிட்டு 389 சிறைக்கைதிகள் விசேட பொது மன்னிப்பின் கீழ் நாளைய தினம் விடுதலை செய்யப்படவுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அவர்களில் 4 பெண் கைதிகளும், 385 ஆண் கைதிகளும் அடங்குவதாகச் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, சிறு குற்றங்களுக்காகத் தண்டனைப் பெற்றுவரும் கைதிகளும், அபராதம் செலுத்த முடியாமல் நீண்டகாலம் சிறைத்தண்டனை பெற்றுவருபவர்களும் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.