அரிசி ஏற்றுமதி தொடர்பான விவகாரத்தில் ரஷ்யா எடுத்துள்ள முடிவு
அரிசி ஏற்றுமதிக்கான தடையை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து ரஷ்யா நாடு அறிவித்துள்ளது.
மேலும் 6 மாதங்கள்
கடந்த 2022 -ம் ஆண்டில் ரஷ்யாவில் இருக்கும் பெடோரோவ்ஸ்கி நீர்மின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டது. அதோடு, அரிசி உற்பத்தி செய்யும் பகுதியான கிராஸ்னோடர் பகுதியில் உள்ள நெல் வயல்களில் பெருவெள்ளம் ஏற்பட்டது.
இதனால், அரிசி ஏற்றுமதிக்கு தற்காலிக தடையை அறிவித்து ரஷ்யா நாடு உத்தரவிட்டது. அதாவது, உள்நாட்டு சந்தைக்கு நிலையான விநியோகத்தை உறுதி செய்வதற்காக டிசம்பர் 31 -ம் திகதி 2024 -ம் ஆண்டு வரை அரிசி ஏற்றுமதிக்கான தடை நீட்டிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது நெல் விதைகளை தவிர அரிசி மற்றும் அரிசி பொருட்கள் ஏற்றுமதிக்கான தடையை ஜூன் 30-ம் திகதி 2025 -ம் ஆண்டு வரை நீட்டித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆனால், EAEU நாடுகள், அப்காசியா மற்றும் தெற்கு ஒசேஷியா ஆகிய நாடுகளுக்கான விநியோகங்களுக்கு இந்த ஏற்றுமதி தடை பொருந்தாது.
மனிதாபிமான உதவிக்காகவும், சர்வதேச போக்குவரத்துப் போக்குவரத்தின் ஒரு பகுதியாகவும் அரிசி ஏற்றுமதி தடை பொருந்தாது.
மேலும், பங்குதாரர் மாநிலங்களின் விதைப் பொருட்களை வழங்குவதற்கான கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, விதைப்பதற்கான அரிசி தற்காலிக தடையில் இருந்து விலக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.