ரயிலில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணை தீவைத்து கொளுத்திய நபர்! சாகும் வரை நின்று பார்த்த கொடூரம்
அமெரிக்காவில் ரயிலில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை தீவைத்து எரித்த நபர் கைது செய்யப்பட்டார்.
உடல் முழுவதும் தீ
நியூயார்க்கின் புரூக்லைனில் உள்ள சுரங்கப்பாதை நிலையத்தில், பெண்ணொருவர் நின்றுகொண்டிருந்த ரயிலில் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது 33 வயதான நபர் அப்பெண்ணின் ஆடையில் தீ வைத்துள்ளார். இதில் அவரது உடல் முழுவதும் தீ பரவியது.
சிறிது நேரத்தில் குறித்த பெண் வலியால் அலறித் துடித்து இறந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஆறு மணிநேரத்தில் குறித்த நபரை பொலிஸார் கைது செய்தனர்.
கடத்தப்பட்ட நபர்
அவரது பெயர் செபஸ்டியன் ஸபேட்டா என தெரிய வந்தது. மேலும், அவர் lighterஐ பயன்படுத்தியதாகவும், தீப்பற்றி எரிந்த பெண் இறக்கும் வரை அங்கேயே நின்று பார்த்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை வெளியிட்ட அறிக்கையில், சந்தேக நபர் 2018யில் அனுமதியின்றி அமெரிக்காவிற்குள் நுழைந்தார்.
சில நாட்களுக்குப் பின் கவுதமாலாவிற்கு நாடு கடத்தப்பட்டார். அவர் எப்போது சட்டவிரோதமாக மீண்டும் நுழைந்தார் என்பது தெளிவாக தெரியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.