;
Athirady Tamil News

அரசு தேர்வு விண்ணப்பங்களுக்கு ஜிஎஸ்டி.., பிரியங்கா காந்தி கண்டனம்

0

அரசு தேர்வு விண்ணப்ப படிவங்களுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பிற்கு பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிரியங்கா காந்தி கண்டனம்
இந்திய மாநிலமான உத்தரபிரதேசம், லக்னோ, சுல்தான்பூர் சாலையில் கல்யாண்சிங் சூப்பர் ஸ்பெஷாலிட்டி புற்றுநோய் மருத்துவமனை உள்ளது.

இங்கு, பல்வேறு துறைகளில் பணிநியமனம் செய்வதற்கு தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கு வயநாடு மக்களவை தொகுதி எம்பி பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “பாஜகவால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை அளிக்க முடியவில்லை. ஆனால், இளைஞர்களின் காயங்களில் உப்பை தேய்ப்பது போல் தேர்வு படிவங்களுக்கு 18 சதவீத வரியை அரசு விதிக்கிறது.

அக்னிவீரர் திட்டம் உள்பட பல்வேறு அரசு வேலை தேர்வுக்கானபடிவங்களுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. ஆனால், பணம் செலுத்திய பின்னர் வினாத்தாள் கசிந்தால் அவர்களின் பணம் வீணாக்கப்படுகிறது.

பெற்றோர்கள் தங்களது உயிரை தியாகம் செய்து பணத்தை சேமிக்கின்றனர். அவர்களின் கனவுகளை வருமான ஆதாரமாக பாஜக மாற்றியுள்ளது” என்று கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.