பால்நிலைசார் வன்முறைக்கு எதிரான செயற்பாட்டுக்குழுக் கலந்துரையாடல்
பால்நிலைசார் வன்முறைக்கு எதிரான செயற்பாட்டுக்குழுக் கலந்துரையாடலானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்று (24.12.2024) மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் பால்நிலைசார் வன்முறைக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டது குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.
மேலும் பிரதேச செயலகங்களுடன் அரசசார்பற்ற நிறுவனங்கள் இணைந்த வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக அரசாங்க அதிபர் அவர்களால் ஆராயப்பட்டு, எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு, அதன் முன்னேற்றத்தினை அடுத்துவரும் காலாண்டு கூட்டத்தில் ஆராய நடவடிக்கைகள் எடுக்குமாறும் அரசாங்க அதிபர் சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களைக் கேட்டுக் கொண்டார்.
இக் கூட்டத்தில் மாகாண சிறுவர் நன்னடத்தை ஆணையாளர், பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்டச் செயலாளர், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட, பிரதேச பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டார்கள்.