பிரித்தானியாவுக்குள் நுழைய முயற்சி… ஒரே நாளில் 107 புலம்பெயர்வோரை மீட்ட பிரான்ஸ் அதிகாரிகள்
பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியில் ஈடுபட்ட 107 புலம்பெயர்வோரை மீட்டுள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
107 புலம்பெயர்வோரை மீட்ட பிரான்ஸ் அதிகாரிகள்
கிறிஸ்துமஸ் பண்டிகையான டிசம்பர் மாதம் 25ஆம் திகதி, அதாவது, நேற்று, ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியில் ஈடுபட்ட 107 புலம்பெயர்வோரை மீட்டதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காலையில், ஆங்கிலக்கால்வாயில் பயணித்துக்கொண்டிருந்த ஒரு படகிலிருந்து 30 புலம்பெயர்வோர் மீட்கப்பட்டுள்ளனர்.
பின்னர், படகொன்றில் இயந்திரக்கோளாறு ஏற்பட்டு தவிப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து அந்தப் படகிலிருந்து 30 பேரை மீட்டுள்ளனர் பிரான்ஸ் அதிகாரிகள்.
அதைத் தொடர்ந்து, மற்றொரு படகும் தண்ணீரில் தத்தளிப்பதாக தகவல் கிடைக்கவே, அதிலிருந்து 26 பேரை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
ஆக மொத்தம், நேற்று ஒரே நாளில் மட்டும் ஆங்கிலக்கால்வாயிலிருந்து 107 புலம்பெயர்வோரை மீட்டதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.