அசர்பைஜான் விமான விபத்து குறித்து ஜெலென்ஸ்கியிடம்..தலைவர் என்ற முறையில்..ட்ரூடோ கூறிய விடயம்
உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியிடம் அசர்பைஜான் விமான விபத்து குறித்து பேசியதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
38 பேர் உயிரிழந்த சம்பவம்
கசகஸ்தானில் தரையிறங்க முயன்ற அசர்பைஜான் விமானம் விபத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்த சம்பவம் பாரிய அளவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்ய ஏர்ஸ்பேஸில் இந்த சோகமான சம்பவம் நிகழ்ந்ததற்காக புடின் மன்னிப்பு கேட்டார்.
இந்த நிலையில் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டுள்ள பதிவில் உக்ரைன் ஜனாதிபதியிடம் பேசியதை கூறியுள்ளார்.
கவலைகள் குறித்து நாங்கள் விவாதித்தோம்
அவரது பதிவில், “தாக்குதலுக்கு உள்ளாகி மற்றொரு கிறிஸ்துமஸைக் கழித்த உக்ரேனிய மக்களுக்கு எனது அசைக்க முடியாத ஆதரவையும், ஒற்றுமையையும் வழங்குவதற்காக இன்று காலை ஜனாதிபதி ஜெலென்ஸ்கியிடம் பேசினேன்.
அசர்பைஜான் ஏர்லைன்ஸ் விபத்து மற்றும் ரஷ்யாவின் ஆக்கிரமிப்புப் போர் பற்றிய எங்கள் பகிரப்பட்ட கவலைகள் குறித்து நாங்கள் விவாதித்தோம்.
G7 தலைவர் என்ற முறையில், அடுத்த ஆண்டு உக்ரைனுக்கு அமைதி மற்றும் சுதந்திரத்திற்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தினேன்” என தெரிவித்துள்ளார்.