யாழ்ப்பாணத்திற்கு ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் சிறப்பு ரயில் சேவை!
யாழ்ப்பாணத்திற்கு,தைப்பொங்கல், சுதந்திர தினம் மற்றும் வார விடுமுறை நாட்களுக்காக ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் சிறப்பு ரயில் சேவை அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக இலங்கை ரயில்வே திணைக்களத்தால் கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறையில் வரையிலும் கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரையிலும் விசேட ரயில் சேவை திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கால அட்டவணை
விசேட ரயில் இலக்கம் 01 – கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரை கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படுதல் – இரவு 07.40க்கு பயணிக்கும்
2025பெப்ரவரி 02, 04 விசேட ரயில் இலக்கம் 02 – பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பதுளையில் புறப்படுதல் – இரவு 07.40க்கு பயணிக்கும்
2025 பெப்ரவரி 02, 04 விசேட நகரங்களுக்கு இடையிலான ரயில் சேவை
கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறைக்கும் இடையில் கொழும்பு கோட்டையில் புறப்படுதல் – அதிகாலை 05.30 மணிக்கு
காங்கேசன்துறையில் இருந்து புறப்படுதல் – பிற்பகல் 01.50க்கு பயணிக்கும் தினங்கள் – 2025 ஜனவரி 10,13,14,15,17,20,24,27,31 – 2025 பெப்ரவரி 03,04 நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Me.