$2-க்கு பர்கர்கள்…! கனடா பிரதமர் பதவி விலகியதை கொண்டாடிய ஹோட்டல்
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ரூட்டோ ராஜினாமா செய்வதாக அறிவித்ததை அடுத்து இதனை கொண்டாடும் விதமாக $2 பர்கர்களை வழங்க இருப்பதாக ஹோட்டல் ஒன்று விளம்பரப்படுத்தி உள்ளது.
பதவி விலகிய ஜஸ்டின் ட்ரூடோ
கனடாவில் கடந்த சில மாதங்களாக நாடாளுமன்றம் முடங்கிய நிலையில், பிரதமராக 9 ஆண்டுகள் பணியாற்றிய ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
அத்துடன் லிபரல் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
🚨BREAKING: Justin Trudeau has officially resigned as Prime Minister of Canada. pic.twitter.com/xN1MoCkqyf
— Benny Johnson (@bennyjohnson) January 6, 2025
புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான செயல்முறையை தொடங்குவதற்காக கட்சியின் தலைவரிடம் கோரிக்கை வைத்துள்ள ட்ரூடோ, புதிய தலைவரை தேர்வு செய்யும் வரை தனது பணிகளை தொடர்வதாகவும் தெரிவித்தார்.
$2-க்கு பர்கர்கள்
இந்நிலையில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ரூட்டோ பதவி விலகியதை கொண்டாடும் விதமாக லாங்லி பிசி டெய்ரி குயின் (Langley BC Dairy Queen) என்ற ஹோட்டல் $2-க்கு பர்கர்களை வழங்கியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
This wasn’t edited btw. It’s a legit image, i confirmed it. https://t.co/5F1BMgXUtl
— Brattani (@Bratt_world) January 7, 2025
இது தொடர்பாக ஆன்லைனில் பரவும் புகைப்படங்களில் Dairy Queen நிறுவனத்தின் “DQ லோகோ” பொறிக்கப்பட்ட பெரிய பலகையில் “கிரில் & சில் ட்ரூடோ ராஜினாமா சிறப்பு $2 பர்கர்கள்”(“Grill & Chill TRUDEAU RESIGNATION SPECIAL $2 BURGERS Drive-thru.”) என்று விளம்பரப்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக சமூக ஊடக பயனர்கள் பலரும் தங்கள் ஆச்சரியத்தை தெரிவித்து வருகின்றனர். அதில் “இது உண்மையா? LMAO மதிய உணவிற்கு நாளை DQ செல்ல இருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.