;
Athirady Tamil News

லண்டன் ஏலத்தில் ரூ.56 லட்சத்திற்கு விற்பனையான 100 ரூபாய் இந்திய கரன்சி நோட்டு

0

லண்டன் ஏலத்தில் அரியவகை ரூ.100 இந்திய கரன்சி நோட்டு ரூ.56 லட்சத்துக்கு விற்பனையானது வைரலாகியுள்ளது.

ரூ.56 லட்சத்திற்கு ஏலம்

சமீபத்தில் லண்டன் ஏலத்தில் அரியவகை ரூ.100 இந்திய கரன்சி நோட்டு ரூ.56 லட்சத்துக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. இச்சம்பவம் நாணயம் சேகரிப்பாளர்களையும் வரலாற்று ஆர்வலர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

1950 -ம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட வரிசை எண் HA 078400 கொண்ட கரன்சி நோட்டு ஏலம் விடப்பட்டது.

இந்த கரன்சிகள் ‘ஹஜ் கரன்சிகள்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த தனித்துவமான கரன்சியானது 1950களில் வளைகுடா நாடுகளுக்கு புனித யாத்திரை செல்லும் இந்திய யாத்ரீகர்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி வழங்கியது.

இந்திய நாணயத்தைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக தங்கம் வாங்குவதைத் தடுப்பதே இதன் நோக்கமாகும்.

இந்த ரூபாய் நோட்டு வரிசை எண் ‘HA’ உடன் வெளியிடப்பட்டது. இந்த ரூபாய் நோட்டுகளை ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், பஹ்ரைன், குவைத் மற்றும் ஓமன் போன்ற நாடுகளில் பயன்படுத்தலாம்.

இதையடுத்து, 1961 ஆம் ஆண்டில், குவைத் மற்றும் வளைகுடா நாடுகள் தங்கள் சொந்த நாணயங்களை வெளியிடத் தொடங்கின.

இதையடுத்து, 1970ல் இந்தியாவில் ஹஜ் கரன்சிகள் வழங்குவது நிறுத்தப்பட்டது. இதனால், நாணய சேகரிப்பாளர்களிடம் இந்த நோட்டு பெரும் வரவேற்பை பெற்றது. ஏனென்றால், அவை வழக்கமான இந்திய நாணயத்திலிருந்து நிறத்தால் வேறுபடுகின்றன.

அதேபோல மற்றொரு ஏலத்தில் இரண்டு ரூபாய் 10 நோட்டுகள் பெரும் தொகைக்கு விற்கப்பட்டன. ஒரு நோட்டு ரூ.6.90 லட்சத்துக்கும், மற்றொன்று ரூ.5.80 லட்சத்துக்கும் ஏலம் போனது. இந்த நோட்டுகள் மே 25, 1918 அன்று முதல் உலகப் போரின் முடிவில் வெளியிடப்பட்டன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.