ISRO தலைவர் பொறுப்பில் மீண்டும் ஒரு தமிழர் – வி. நாராயணன் யார் தெரியுமா?
இஸ்ரோவின் புதிய தலைவராகத் தமிழகத்தைச் சேர்ந்த வி. நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இஸ்ரோ
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) என்பது பெங்களூரு நகரை தலைமையிடமாகக் கொண்ட இந்திய அரசின் விண்வெளி நிறுவனம் ஆகும். இது 1969 இல் உருவாக்கப்பட்டது. இதன் 10 வது தலைவராக சோம்நாத் ஜனவரி 15 ஆம் தேதி 2022 ஆண்டு பதவி ஏற்றார்.
இவரின் பதவிக் காலம் நிறைவடைய உள்ளது. இந்த நிலையில் , புதிய தலைவராக நாராயணன் என்பவரை மத்திய அரசின் நியமனக் குழு தேர்வு செய்துள்ளது. வி. நாராயணன், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
திருவனந்தபுரத்தின் வலியமலாவில் உள்ள எல்.பி.எஸ்.சி.யின் இயக்குநராக பணியாற்றியுள்ளார்.விண்வெளித் துறையில் நாராயணின் பணியைப் பாராட்டி, இஸ்ரோவின் உயரிய பொறுப்பான “Distinguished Scientist” பொறுப்பு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
புதிய தலைவர்
இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி57, சூரியன் ஆய்வுக்கான ஆதித்யா எல்1 திட்டம், ஜிஎஸ்எல்வி எம்.கே 3, சந்திரயான் 2 மற்றும் 3 உள்ளிட்ட திட்டங்களில் முக்கிய பங்காற்றி உள்ளார்.மேலும் வரும் 14ஆம் தேதி இஸ்ரோவின் தலைவராக நாராயணன் பொறுப்பேற்க உள்ளார்.
தொடர்ந்து 2 ஆண்டுகள் இஸ்ரோ தலைவராக அவர் பதவியில் தொடர்வார் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் 11 வது தலைவராக வி. நாராயணன் நியமிக்கப்பட்டு அந்தஸ்தைப் பெற்றுள்ளார்.